×

போலீஸ் டார்ச்சரால் இன்ஜினியர் தற்கொலை?

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொல்லஞ்சியை சேர்ந்தவர் லிபின்ராஜ் (30). இன்ஜினியரிங் பட்டதாரி. இந்த நிலையில் நேற்று தக்கலை தனிப்படை போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி லிபின்ராஜை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணை முடிந்து இரவு லிபின்ராஜ் வீடு திரும்பினார். ஆனால் எதிர்பாராதவிதமாக இன்று காலை லிபின்ராஜ் வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் அவரை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்து அவர் விஷம் குடித்து இறந்திருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே லிபின்ராஜ் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். …

The post போலீஸ் டார்ச்சரால் இன்ஜினியர் தற்கொலை? appeared first on Dinakaran.

Tags : MARTHANDAM ,Lipinraj ,Marthandam Kollanji ,Kanyakumari district ,Takkalai ,Dinakaran ,
× RELATED விஜய் வசந்த், தாரகை கத்பர்ட் வெற்றி திமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்