×

திருமழிசை சந்தையில் படுகாயங்களுடன் சேற்றிலிருந்து மீட்கப்பட்ட வாலிபர் பலி

திருவள்ளூர்: திருமழிசை காய்கறி சந்தையானது, அவ்வப்போது பெய்யும் மழையில் சகதியாக உள்ளது. கடந்த 4ம் தேதி மாலை, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் சகதியில் விழுந்து கிடப்பதாக, குத்தம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணனுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து அவர் வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, வெள்ளவேடு போலீசார் வந்து மயங்கி கிடந்த வாலிபரை மீட்டு சென்னை கே.எம்.சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழந்தார்.


Tags : Tiramisu Market, Diseases, Youth Kills
× RELATED சிறுமியிடம் பலாத்கார முயற்சி வாலிபர் கைது