×

வெள்ளவேடு காவல் நிலையம் மூடல்

திருவள்ளூர்: வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள், ஏட்டுகள் உட்பட 40 போலீசார் பணியில் உள்ளனர். இதில், இரு போலீசாருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மற்ற போலீசாருக்கு நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில், வெள்ளவேடு போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீஸ் நிலைய நுழைவாயில் கேட் மூடப்பட்டு பூட்டு  போடப்பட்டது. தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் போலீஸ் நிலையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Closure ,Wellawatte Police Station Closure ,Wellawatte Police Station , Flooding, Police Station, Closure
× RELATED மூன்றாவது முறையாக காவல் நிலையம் மூடல்