×

கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:  
கொரோனா தொற்றை வாய்ப்பாக பயன்படுத்தி, மத்திய அரசு தனது சொந்த கொள்கைகளை நிறைவேற்றிட முயன்று வருவது கடும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக கொரோனாவின் காரணமாக அனைத்தும் முடங்கிய நிலையில் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தனக்கு மிக சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிக முக்கிய பாடங்களை நீக்கியுள்ளது உள்நோக்கம் கொண்டது. அதே போன்று இடஒதுக்கீட்டிற்கு எதிராக பொருளாதார அளவு கோலை பின்பவற்றுவது சமூக நீதிக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையாகும். எரிந்த வீட்டில் இழுத்தது லாபம் என்பது போன்று, மத்திய அரசு கொரோனாவைக் காரணம் காட்டி தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை, ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிறைவேற்றிட முயற்சிப்பதை கைவிட வேண்டும்.

Tags : government ,Central , Corona, Central Govt
× RELATED நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக...