×

குருவாயூர் கோயிலில் திருமணத்திற்கு அனுமதி

திருவனந்தபுரம்: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கேரளாவில் சபரிமலை உள்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடப்பது வழக்கம். ஊரடங்கால் ஒரு மாதத்துக்கு மேலாக கோயிலில் திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (10ம் தேதி) முதல் திருமணங்கள் நடத்த அனுமதி அளிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதிகாலை 5 முதல் 12.30 மணி வரை திருமணங்கள் அனுமதிக்கப்படும். தினமும் அதிகபட்சமாக 40 திருமணங்கள் நடத்தலாம்.


Tags : Guruvayoor Temple Guruvayoor Temple , Guruvayoor Temple, Marriage, Permission
× RELATED பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ...