×

சித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறினால் சந்தேகப்படுவது ஏன்?.. சித்த மருத்துவத்தை அரசுகள் புறக்கணிப்பதாக நீதிபதிகள் வேதனை!!

சென்னை: சித்த மருத்துவத்தின் மீது மத்திய, மாநில அரசுகள் பாகுபாடு காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம், கொரோனா நோய்த் தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக, தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். இந்த நிலையில், மேலும் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில் தந்தை கலியபெருமாள் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நீதிபதிகள் காட்டம்!!


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சித்த மருத்துவத்தின் மீது மத்திய, மாநில அரசுகள் பாகுபாடு காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அலோபதி சிகிச்சை பெயரில் கபசுர குடிநீர் கொடுத்து சித்த மருத்துவ சிகிச்சை தான் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நீதிபதிகள் : கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன் ?

நீதிபதிகள் : சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிப்பது வேதனையாக உள்ளது.

நீதிபதிகள் : 60 ஆண்டு சித்த மருத்துவராக உள்ள மதுரை சுப்ரமணியன் கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்ததாக அரசிடம் கூறினார்.  தமிழக அரசு புறக்கணித்ததால் சித்த மருத்துவர் சுப்ரமணியன் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.ஆரம்பத்திலேயே அவரது மருந்தை பரிசீலனை செய்திருந்தால் இந்நேரம் பயன்பாட்டிற்கே வந்திருக்கும்.

நீதிபதிகள் : கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எத்தனை சித்த மருந்துகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன ? அவற்றில் எத்தனை ஆய்வுக்கு அனுப்பப்பட்டது?

நீதிபதிகள் : தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ?

நீதிபதிகள் : சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது?

நீதிபதிகள் : நமது மருத்துவர்களுக்கு கட்டமைப்பு, பண உதவி செய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.

நீதிபதிகள் : தமிழகத்தில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன ?யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்தா துறை வளர்ச்சிக்காக 5 ஆண்டில் எவ்வளவு செலவிடப்பட்டது ?

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 23ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : doctors ,governments ,Judges , Corona, infection, paranoia, medicine, judges, torment
× RELATED பஞ்சுமிட்டாயில் நஞ்சு கலப்பு…