×

கொரோனா கிருமி அடங்கிய நீர்த் துளிகளால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே காற்றில் பயணிக்க முடியும் : சி.எஸ்.ஐ.ஆர் விளக்கம்

டெல்லி : கோவிட் 19 வைரஸ் காற்றிலும் பரவும் என்று சர்வதேச விஞ்ஞானிகளின் எச்சரிக்கை பற்றி அதிகம் கவலை கொள்ள தேவையில்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாய் மற்றும் மூக்கின் வழியே வெளியாகும் வைரஸ் அடங்கிய நுண் நீர் துளிகள், காற்றின் மூலம் பரவுவதை 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கண்டறிந்து, அதனை ஆதாரங்களுடன் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்த சான்றுகள் நம்பத்தகுந்தவை அல்ல என்று முதலில் தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, தற்போது விஞ்ஞானிகளின் கூற்றை ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உமிழ்நீர்த் துளி மூலம் காற்றில் மிதந்தாலும் அது தற்காலிகம் தான் என்று சி.எஸ்.ஐ.ஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. 5 மைகிரானுக்கும் குறைந்த அளவு உள்ள கொரோனா கிருமி அடங்கிய நுண்ணுயிர் நீர்த் துளிகளால் ஒரு சில நிமிடங்கள் வரை மட்டுமே காற்றில் பயணிக்க முடியும் என்று சிஎஸ்ஐஆர் விளக்கம் அளித்துள்ளது. எனவே ஏற்கனவே மக்கள் கடைப்பிடித்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தொடர வேண்டும் என சி.எஸ்.ஐ.ஆர். அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே காற்று மூலம் கொரோனா பரவல் குறித்த விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலை அடுத்து உலக சுகாதார அமைப்பு, கோவிட் -19 குறித்த தமது பரிந்துரைகளில் திருத்தங்கள் செய்து விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : CSIR ,Corona , Corona, germ, water droplets, in air, CSIR, description
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...