×

மதுக்கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்: புதுச்சேரி பெண் தாதா மீது மீண்டும் வழக்கு!!!

காரைக்கால்: மதுக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் மீண்டும் புதுச்சேரி பெண் தாதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் மதுக்கடை உரிமையாளர் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு சென்ற 3 பேர் எழிலரசி அனுப்பியதாக பணம் கேட்டு வெங்கடேஷை மிரட்டியுள்ளனர். இதற்காக எழிலரசி பேச விரும்புவதாக கூறி வெங்கடேஷிடம் செல்போனை கொடுத்துள்ளனர். இதற்கு உடன்படாத வெங்கடேஷ் காரைக்கால் மாவட்ட கண்காணிப்பாளர் வீரவல்லவனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 இதனைத்தொடர்ந்து, எழிலரசியின் ஆட்கள் 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், போலீசார் வருவதை அறிந்த எழிலரசி வீட்டிலிருந்து தப்பித்து தலைமறைவாகினார். கொலை மற்றும் பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள எழிலரசியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், புதுச்சேரி மாநிலம் முன்னாள் சபா நாயகர் வி.எம். சிவகுமார் கடந்த  2017ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்டவர் எழிலரசி ஆவார்.

தற்போது, இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு வழக்கில் குண்டர் சட்டத்தில் எழிலரசி கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலையான எழிலரசி மீண்டும் ஒரு வழக்கில் சிக்கி உள்ளார். இதைத்தொடர்ந்து,  பல முக்கிய வழக்குகளில் சிக்கியுள்ள எழிலரசியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Dada ,Puducherry ,bar owner Bar owner , Puducherry woman sues Dada again for demanding money from bar owner
× RELATED கோவையில் இறந்தது இலங்கை தாதாவா? டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீஸ் முடிவு