×

கொரோனா வைரஸ் உள்பட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பணியாற்றும் வங்கி ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க நிர்மலா சீதாராமன் உத்தரவு

டெல்லி: கொரோனா வைரஸ் காலத்தில் பணியாற்றும் வங்கி ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த மாதம் கனரா வங்கியின் பெண் ஊழியர் ஒருவரை போலீஸார் தாக்கியது, மகாராஷ்டிராவில் வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்தன.

இதனை தொடர்ந்து அனைத்து வங்கி ஊழியர்கள் அமைப்பு ஊழியர்களுக்குப் பாதுகாப்பான சூழல் தேவை எனக் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருந்தார். இதையடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் உள்பட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வங்கி ஊழியர்கள் மக்களுக்காகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்கும், மரியாதைக்கும் சிறிதும் அச்சுறுத்தல் இல்லாத சூழல் நிலவ வேண்டும்.

சமூகவிரோதிகள் வங்கிக்குள் நுழைந்து, வங்கி ஊழியர்களை மிரட்டுவது அவதூறாகப் பேசுவது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. வங்கி ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர், வங்கி ஊழியர்களிடம் தகாத முறையில் பேசுவோர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.



Tags : Nirmala Sitharaman ,bank employees ,bank ,Corona , Corona virus, bank
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...