×

காளையார்கோவிலில் விளைநிலங்களை ஆக்கிரமித்த கருவேலம்: வேரோடு பிடுங்கி எறியப்படுமா?

காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியத்தில் அதிகப்படியான மக்கள் விவசாயத்தைச் சார்ந்தே வாழ்கின்றனர். விளைநிலங்களில் சீமை கருவேலமரங்களின் அதிகப்படியான வளர்ச்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தைச் சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் மண் மலட்டுத் தன்மை ஆவதுடன் நிலத்தடி நீரும் அதிகளவு உறிஞ்சப்படுவதினால் விளைச்சல் பாதிப்படைகிறது. சீமைக் கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களை காப்பாற்ற முடியும். இதற்கான இயந்திரச் செலவு அதிகமாக இருப்பதால்,  போதிய வசதியில்லாத விவசாயிகள்  அழிக்காமல் விட்டுவிட்டனர். இதை கருத்தில் கொண்டு சில வருடத்திற்கு முன் சீமைகருவேலா மரங்களை அழிப்பதற்கு அரசு முன்வந்து தாலுகா அலுவலகத்தின் மூலமாக ஏலம் விடப்பட்டன.

ஏலம் எடுப்பவர்களிடம் கருவேல மரங்களை முழுமையான அகற்றுவதற்கான விதி முறைகளை அறிவிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் ஒவ்வொரு பகுதிகளிலும் முழுமையாக வெட்டாமலும், வெட்டிய மரத்தின் வேர்பகுதிகளை தோண்டாமலும் விட்டுவிட்டனர். இதனால் தற்போது பெய்த சிறு மழைக்கு அதிகமாக கருவேல்மரங்கள் முளைத்து உள்ளன. இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் விவசாயம் செய்வதற்கான நிலங்கள் குறைந்து சீமைக் கருவேல மரங்கள் மட்டுமே வளரக்கூடிய நிலை ஏற்படும். அரசு மீண்டும் நடவடிக்கை எடுத்து சீமைக் கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களைக் காப்பாற்ற முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : farmland ,Kaliyarikovil , In Kaliyariko, the fields, the kovalam
× RELATED தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள...