×

இ-பாஸ் இல்லாமல் மதுரையில் உள்ள கிராமங்களுக்கு வருபவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது..: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை: இ-பாஸ் இல்லாமல் மதுரைக்கு வருபவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் எய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், கொரோனா பரவலை தடுக்க அரசு நெறிமுறைகளை வகுத்தாலும், பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும் முடியும் என தெரிவித்தார். ஜல்லிக்கட்டு வீரராக இருந்தாலும் கொரோனாவிடம் எச்சரிக்கை உணர்வோடு தான் இருக்க வேண்டும் என கூறிய அமைச்சர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இ-பாஸ் இல்லாமல் மதுரையில் உள்ள கிராமங்களுக்கு வருபவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும்,நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கூறிய அமைச்சர், கொரோனா தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம் எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக, அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு முதல்வர் தமிழகம் முழுவதும் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, மதுரையில் சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறார். முதல்வரின் அறிவுரைப்படி மக்களுக்கு தைரியம் ஊட்டும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் சுகாதாரச் செயலாளர் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மதுரை மக்கள் அச்சமில்லாமல் அரசுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மேலும், காய்ச்சல் கண்டறியும் குழுக்கள் வீடு வீடாக கண்காணித்து வருகின்றனர். விரைவில் மதுரை கரோனா இல்லாத மாவட்டமாக உருவாகும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Tags : Committee ,villages ,Udayakumar ,Madurai , EPass, Madurai, Monitoring Committee, Minister Udayakumar, Corona
× RELATED இ-பாஸ் முறையை எளிமையாக்க மேலும் ஒரு...