இந்திய - சீனா விவகாரம்!: சீனாவுக்கு இந்தியா தக்க முறையில் பதிலடி கொடுத்தது..அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ

வாஷிங்டன்: ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா சிறந்த முறையில் பதிலடி கொடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். பூடான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் சீனாவுக்கு பதிலளிக்க உலகம் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய - சீனா விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பலமுறை பேசியதாக கூறியுள்ள மைக் பாம்பியோ எல்லை தாக்குதலில் சீனா ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சனையை தூண்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், உலக நாடுகள் அதனை அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

 மேலும், சீனாவின் அண்டை நாடுகளுக்கு எல்லை எங்கு முடிகிறது என்று தீர்த்தமாக தெரியவில்லை என்றும், அதனை சீனா மதித்து நடந்துக் கொள்ளவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கேட்டுக்கொண்டுள்ளார். இது சீனா - பூடான் எல்லை விவகாரத்திலும் உண்மையாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின் மூலம் இந்திய - சீனா எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி திரும்பிய நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த கருத்து வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: