×

ரகசியங்கள் திருடப்படுவதாக சந்தேகம்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக்,பப்ஜி உள்ளிட்ட 89 செயலிகளை செல்போன்களில் இருந்து அழிக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!!

டெல்லி : பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 முக்கிய செல்போன் செயலிகளை தங்கள் போன்களில் இருந்து உடனே அழித்துவிடுமாறு ராணுவ வீரர்களை ராணுவ தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. ராணுவ வீரர்களிடம் உள்ள செல்போன் செயலிகள் மூலம் ராணுவ ரகசியங்கள் திருடப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பேஸ்புக்,டிக்டாக். ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரசெர், மினி,Zoom, கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளம் ஃபேக்டரி, டிண்டெர்,360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட் உள்ளிட்ட 89 உள்ளிட்ட 89 செயலிகளை உடனே அழித்துவிடுமாறு வீரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த செயலிகளால் இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீன உளவு அமைப்புகளால் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள், சமூக வலைதளங்களில் அதிகளவில் கண்காணிக்கப்படுவதால் இந்திய ராணுவம் மேற்கண்ட  நடவடிக்கையை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் முக்கியமான தரவுகள் கசிவதை தடுக்கும் நோக்கில் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும், இந்த ஒழுங்குமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டதால், அண்மையில் 59 செயலிகள் ரத்து செய்யப்பட்டன. இவைகள் அனைத்தும் சீனாவிற்கு சொந்தமானவை ஆகும். சீனாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த செயலிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. ஆனால் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற செல்போன் செயலிகள் மூலம் ராணுவ வீரர்களின் ரகசியம் கசிவதாக இந்திய ராணுவம் சந்தேகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை ராணுவ அதிகாரிகள் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Soldiers ,Pubji , Secrets, Doubts, Facebook, Instagram, Dictag, Pubg, T89 Processors, Soldiers, Warranty
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை