×

முதல்முறையாக ஒரே நாளில் 24,879 பேர் பாதிப்பு ; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.67 லட்சமாக உயர்வு; இதுவரை 21,129 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்தை தாண்டியது. உலகையே   ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில்   பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,67,296-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,879 பேர் புதிதாக   பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 21,129 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 487 உயிரிழந்துள்ளனர்.   இதுவரை 4,76,378 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,548 பேர்   குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,23,724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,448 பேர்   உயிரிழந்துள்ள நிலையில், 1,23,192 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில்   1,22,350 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,700 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 74,167 பேர்   குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,04,864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு,   3,213 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 78,199 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்திற்கு   முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 13,336 பேருக்கு பாதிப்பு; 16 பேர் பலி; 8,729 பேர் குணமடைந்தது.
பீகாரில் 13,189 பேருக்கு பாதிப்பு; 107 பேர் பலி; 9,554 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 513 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 402 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 3525 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 2,835 பேர் குணமடைந்தது.

கோவாவில் 2,039 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 1207 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 38,333 பேருக்கு பாதிப்பு; 1,993 பேர் பலி; 27,289 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 18,690 பேருக்கு பாதிப்பு; 282 பேர் பலி; 14,106 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1,761 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1,324 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 6195 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 3559 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 22,063 பேருக்கு பாதிப்பு; 482 பேர் பலி; 16,866 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 3096 பேருக்கு பாதிப்பு; 22 பேர் பலி; 2170 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 1041 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 836 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,435 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 793 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 80 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 197 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 133 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 657 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 304 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 10,624 பேருக்கு பாதிப்பு; 48 பேர் பலி; 7006 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 1008 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 480 பேர் குணமடைந்தது.
பஞ்சாப்பில் 6,907 பேருக்கு பாதிப்பு; 178 பேர் பலி; 4,828 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 3,258 பேருக்கு பாதிப்பு; 46 பேர் பலி; 2,650 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 28,877 பேருக்கு பாதிப்பு; 470 பேர் பலி; 11,876 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 9261 பேருக்கு பாதிப்பு; 149 பேர் பலி; 5,567 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 29,536 பேருக்கு பாதிப்பு; 324 பேர் பலி; 17,167 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 24,823 பேருக்கு பாதிப்பு; 827 பேர் பலி; 16,291 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 31,156 பேருக்கு பாதிப்பு; 845 பேர் பலி; 20,331 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 22,259 பேருக்கு பாதிப்பு; 264 பேர் பலி; 11,101 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 287 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 109 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 16,036 பேருக்கு பாதிப்பு; 629 பேர் பலி; 11,987 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 1101 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 833 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 149 பேருக்கு பாதிப்பு; 77 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
தாதர் நகர் ஹவேலியில் 408 பேருக்கு பாதிப்பு; 184 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 133 பேருக்கு பாதிப்பு; 71 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.



Tags : victims ,time ,India ,Corona ,population , 24,879 victims affected for the first time in a single day; India's Corona victims rise to 7.67 lakh So far 21,129 people have been killed
× RELATED நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்