×

கோயில் உண்டியல் உடைப்பு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் பகுதியில் கடற்கன்னி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை, அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி (73) என்பவர் கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் திறந்து பார்த்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.12 ஆயிரம் பணம், வெள்ளி சந்தன கிண்ணம், கொலுசு, கண்மலர், தங்க மூக்குத்தி ஆகியவை திருடு போயிருந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹேமாவதி இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Temple Bundle Breakdown , Temple, bundle, break
× RELATED சென்னையில் தொழிலதிபரை கடத்தி ரூ.2 கோடி...