×

பெண் தன்னார்வலரிடம் ஆபாசமாக பேசிய மாநகராட்சி உதவி பொறியாளர் அதிரடி சஸ்பெண்ட்: ஆணையர் பிரகாஷ் உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த பெண் தன்னார்வலரிடம் ஆபாசமாக பேசிய மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் கமலக்கண்ணன். இவர் கொரோனா தடுப்பு பணிக்கு மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பெண் தன்னார்வலர் ஒருவரிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், பெண் தன்னார்வலர் அழகாக இருப்பதாகவும், அவருடைய டிக்டாக் வீடியோக்களை பார்த்து ரசித்ததாகவும் தெரிவிக்கும் கமலக்கண்ணன் தனக்கு சம்பளம் அதிகம் எனவும் தனக்கு திருமணம் ஆகியிருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்திருந்தால் அந்த பெண் தன்னார்வலரை தான் திருமணம் செய்திருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் உதவி பொறியாளர் என்பது பெரிய பதவி என்றும் காவல் துறையில் உதவி ஆணையருக்கு இணையான ஒரு பொறுப்பு என்று பெருமை பேசும் கமலக்கண்ணன் அவரை பிடிப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இது அனைத்தையும் சமாளிக்கும் நோக்கில் கேட்டுக்கொண்டு பேசும் அந்த பெண் தன்னார்வலர் ஒரு கட்டத்தில் வீட்டில் ஆள் இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துவிடுகிறார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தன்னார்வலர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் கட்ட விசாரணை நடத்த சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த விசாரணையில் முடிவில் உதவி பொறியாளர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்
ளார்.கொரோனா காலத்தில் களத்தில் பணியாற்றியாற்றும் தன்னார்வலருக்கு உதவி பொறியாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவாகரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாநகராட்சி பணியாளர்கள் முதல் காவலர்கள் வரை பலர் முன்கள பணியாளராக தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட பெண் தன்னார்வலர் ஒருவரிடம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆபாசமாக பேசும் உதவி பொறியாளர் குறித்து சக மாநகராட்சி அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

Tags : Prakash ,Assistant Engineer Action ,volunteer Municipal Assistant Engineer Action ,volunteer , Woman Amateur, Speaking Porn, Corporation Assistant Engineer, Suspend, Commissioner Prakash
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...