×

அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அமைச்சர் சி.வி.சண்முகம் மூச்சு திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று காலை 11.50 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் காரணமாக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர்.

இந்த பரிசோதனை முடிவுகள் இன்று அல்லது நாளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே அவர் காய்ச்சல் காரணமாக சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் அவர் குணமடைந்து விட்டதாக வீட்டுக்கு வந்தார். தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* 2 அமைச்சர்களின் மகன்களுக்கு கொரோனா
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவருமே டாக்டர்கள். இதனால் அவர்கள் இருவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அதேபோல, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனின் மகனுக்கும் நேற்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

Tags : CV Shanmugam ,hospital , Minister CV Shanmugam, hospital, clearance
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...