×

குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பளுவால் கொரோனா அறிகுறியுடன் பணியாற்றும் ஊழியர்கள்: சக பணியாளர்கள் அச்சம்

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது. இங்கு 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பாணியில் உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அலுவலகம், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் பயிற்சி பள்ளி, வட்டார கல்வி அலுவலகம், இ சேவை மையம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இதையொட்டி, குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக இங்கு தினமும் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குறைந்த ஊழியர்களை கொண்டு பணிகள் நடக்கின்றன. கடந்த 2 வாரங்களுக்கு முன் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா உறுதியானது. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் விடுப்பில் சென்றுவிட்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊரக வளர்ச்சி துறையினருக்கு அதிக பங்குள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், ஒரு சில ஊழியர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையிலும், பணி சுமை காரணமாக, தினமும் வந்து செல்கின்றனர். இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Tags : Kundathoor Regional Development Office Workload ,coworkers ,Chundtur Regional Development Office , Kundathoor, Regional Development Office, Workload, Corona Sign, Workers, Co-workers, Fear
× RELATED கொள்ளிட கரையில் மணல்குவாரி துவங்க...