×

கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் விதிமுறைகள் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை:  சென்னையின் பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் கொரோனாவால் மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்கு கொண்டு சென்றபோது அந்த பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவரது உடல் அருகில் உள்ள வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், டாக்டர் சைமனின் உடல் அடக்கத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா நோய்த் தொற்று பாதித்து உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

Tags : victims ,Government of Tamil Nadu ,Icort , Coronal sacrifice, body, burial, what are the rules, Government of Tamil Nadu, iCort Question
× RELATED வேளாண் பாதுகாப்பு மண்டல விதிகள் தயார்