×

அமெரிக்காவில் டிக்டாக் தடை டிரம்ப் பரிசீலனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் `டிக்டாக்’ செயலிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இதனிடையே, இந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ``டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து அரசு நிர்வாகம் ஆலோசித்து வருகிறது’’ என்று நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிபர் டிரம்ப், ``சீனாவின் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. கொரோனா வைரசால் அமெரிக்காவில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். இதுவரை 1.30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனவே, சீன அரசுக்கு பதிலடி கொடுப்பதற்கான பலவழிகளில் டிக்டாக் தடையும் ஒன்று’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : United States ,Trump , The United States, the dicta ban, Trump, review
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து