×

சில்லி பாயின்ட்...

* ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும். வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே வெளிநாட்டில் நடத்துவது பற்றி பரிசீலிப்போம். ஐபிஎல் இல்லாமல் 2020 நிறைவடைவதை விரும்பவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
* ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் நிறவெறி கொடுமையானது என்பது பற்றி கற்பிக்காத வரை அது இருந்து கொண்டுதான் இருக்கும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் வேதனை தெரிவித்துள்ளார்.
* டோக்கியோ ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என நம்புகிறேன். அதை குறிவைத்தே தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன் என்று ஸ்பெயின் பேட்மின்டன் நட்சத்திரம் கரோலினா மரின் கூறியுள்ளார்.
* எனது விளையாட்டுத் திறனில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை சரி செய்துகொள்ள ஊரடங்கு காலம் வெகுவாக உதவியது என்று ஹாக்கி வீரர் கோதஜித் சிங் தெரிவித்துள்ளார்.
* கிரிக்கெட் விளையாட்டுக்கு சவுரவ் கங்குலியின் பங்களிப்பு மகத்தானது. இன்னும் பல தலைமுறைகளுக்கு அவரது சாதனைகளும், செயல்பாடுகளும் நிச்சயமாக வியந்து பாராட்டப்படும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
* ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளிடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவுகிறது. இரு அணிகளும் தலா 34 லீக் ஆட்டத்தில் விளையாடி உள்ள நிலையில் ரியல் மாட்ரிட் 77 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், பார்சிலோனா 73 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.

Tags : Chili, Point
× RELATED சில்லி பாயின்ட்...