×

ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை: நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே அனுமதி

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21-ம்தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் நடந்த உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

16 கிலோமீட்டர் தொலைவு கொண்ட பல்தால் வழிப்பாதை மட்டுமே அமர்நாத் யாத்திரைக்காக திறந்து விடப்படும். பாகல்கம் பாதை பனியால் மூடப்பட்டுள்ளது. அந்த பாதை திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 42 நாட்களுக்கு அமர்நாத் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் 23-ம் தேதி தொடங்க வேண்டிய யாத்திரை கால தாமதமாக தொடங்க உள்ளது.



Tags : Pilgrimage ,Amarnath ,Amarnath Pilgrimage ,Corona , Amarnath Pilgrimage, Corona
× RELATED ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம்