சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் தலைமைக்காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி மீண்டும் விசாரணை..!!

கோவில்பட்டி: சாத்தான்குளம் காவல்நிலைய தலைமைக்காவலர் ரேவதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு ரேவதி ஆஜராகியுள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்திவருகிறார். இதற்கிடையில், இவ்வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அனுமதியுடன் சிபிஐ-க்கு மாற்றியது தமிழகஅரசு. சிபிஐ விசாரணையைக் கையில் எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிசிஐடி போலீஸார்,  காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்களை பதிவுசெய்தனர்.

இதேபோல் பெண் தலைமைக்காவலர் ரேவதி, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்நிலையில் போலீஸாருக்கு எதிராக சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை சிபிசிஐடி போலீஸார் இன்று, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜூன் 19-ம் தேதி இரவு நடைபெற்ற சம்பவம் குறித்து தலைமை குற்றவியல் நடுவரிடம் சாட்சியம் அளித்தார். தொடர்ந்து அவரை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது சாத்தான்குளம் காவல்நிலைய தலைமைக்காவலர் ரேவதி மீண்டும் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார்.

Related Stories:

>