புதுக்கோட்டையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விவசாயி உயிரிழப்பு...! காப்பாற்ற முயன்ற செல்லப்பிராணியான நாயும் பலி!!!

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் மலையூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விவசாயி உயிரிழந்தார். சமீப காலமாக மழை பெய்து வருவதால் மின்கபிகள் அறுந்து விழுவது வாடிக்கையாகி விட்டது. இதனால், அதிகளவு விவசாயிகளே பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில், அவர்கள் தங்கள் தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வருபவர்கள். இதனால், மின்கம்பிகள் அறுந்து கிடப்பதை அறியாமல் இதுவரை பல விவசாயிகள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மலையூரில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார்.

அவர் ஒரு விவசாயி. அவர் இன்று காலையில் வழக்கம் போல் தனது செல்லப்பிராணியான நாயுடன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது நேற்று பெய்த மழையால் தோட்டத்தில் மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்து அதிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறியாமல் அங்கு சென்ற கருப்பையா மின்கம்பியின் மீது நடந்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் துடிதுடித்தார்.

இதனை அறிந்த நாய் தனது வாயால் கவ்வி, கருப்பையாவை காப்பாற்ற முயற்சித்துள்ளது. ஆனால் சம்பவ இடத்திலேயே கருப்பையாவும், அவரை காப்பாற்ற முயன்ற செல்லப்பிராணியும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து அங்கு சென்ற மழையூர் காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: