×

சிறுமுகை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்டறிய சிறப்பு குழுவினர் ரோந்து

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட சுற்று வட்டார வனப்பகுதிகளில் கரடி, காட்டுயானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, கடமான், புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை வனவிலங்குகள் உள்ளன.  கடந்த 6 மாதத்தில் 13 யானைகள் கோவை மாவட்டம் போளுவாம்பட்டி முதல் சிறுமுகை வரை உள்ள வனப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை, உளியூர், கூத்தம்மண்டி, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய 5 பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிய  சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் 5 சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் நேற்று முதல் ேராந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : teams ,forest , Minor Forest, Elephant Walking, Special Crew Patrol
× RELATED பறக்கும்படை சோதனையில் ₹1.63 கோடி ரொக்கம் பறிமுதல்