கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணியிடம் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்: பொதுப்பணிகளில் இருப்பவர்களுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை..!!

சென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியதாக கூறினார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது மகன் தரணிதரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>