×

2035-இல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்படும்.. மெரினா கடற்கரை காணாமல் போகும் : சென்னை ஐஐடி எச்சரிக்கை தகவல்!!

சென்னை: சென்னையில் 2015-ஆம் ஆண்டை காட்டிலும் பல மடங்கு அதிகமான மழைப் பொழிவு வரும் காலங்களில் ஏற்படலாம் என்றும் மெரினா உள்பட சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகள் காணாமல் போகும் சூழல் ஏற்படும் என்றும் சென்னை ஐஐடி எச்சரித்துள்ளது. கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆய்வு மேற்கொண்டது.

சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர பகுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பருவநிலையில் செயற்கையாக திணிக்கப்படும் மாற்றங்களால், வரும் ஆண்டுகளில், 2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தை விட பல மடங்கு பேரிழப்பை ஏற்படுத்தக் கூடிய வெள்ளம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேராசிரியர் பாலாஜி அளித்த பேட்டியில், பருவநிலை மாற்றம் குறித்து சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2035, 2055, 2075 உள்ளிட்ட ஒவ்வொரு இருபதாண்டு கால இடைவெளியிலும் சென்னையில் மழைப்பொழியின் தீவிரம் அதிகரிக்கும்.2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துடன் ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் அதைவிட இரண்டரை மடங்குக்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக மெரினா உள்பட சென்னையின் தற்போதைய கடற்கரைப் பகுதிகள் பலவும் மழையின் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு கடலால் ஆட்கொள்ளப்படலாம், என்றார்.

Tags : Flooding ,Chennai ,Marina beach ,IIT , Chennai, Peru, Marina, Beach, Chennai, IIT, Warning, Information
× RELATED இதுவரை காணாத வகையில் திடீரென மாறியது...