×

ஹைதராபாத்தில் 'கோவாக்சின்'கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது

ஹைதராபாத்: இந்தியாவின் முதல் தடுப்பூசியான ‛கோவாக்சின் அடுத்தக்கட்ட பரிசோதனை தொடங்கியது. மனிதர்களிடம் நடத்தப்படும் இப்பரிசோதனை ஐதராபாத் நிஜாம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது. ஐ.சி.எம்.ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைராலஜி மையம் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து, கோவாக்சின் என்ற தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. முதல்கட்ட பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், இந்த மருந்தை மனிதர்களுக்கு அளித்து பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று ஹைதராபாத் நிஜாம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது.

இதுகுறித்து நிஜாம் அரசு மருத்துவமனை இயக்குநர் கூறுகையில்: ஐ.சி.எம்.ஆர் அறிவுரையின்படி முதலில் இந்த மருந்து மீது நம்பிக்கை உள்ள நபர்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு, அதில் கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தி சோதனை செய்யப்படும். இதனை தொடர்ந்து அதே ரத்தத்தில் மேலும் சில மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதன்பின்னர் முதல் டோஸ் வழங்கப்படும். இதுபோன்று 3 டோஸ்கள் செலுத்தப்பட்ட பின்னர் பரிசோதனை நிறைவு பெறும். முதல்முறை தடுப்பூசி செலுத்தப்பட்ட அந்த நபர் 2 நாட்கள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார். அதன் பின்னர் 14 நாட்கள் கழித்து 2வது டோஸ் செலுத்தப்படும். பின்னர் 2 நாட்கள் கண்காணிக்கப்பட்டு, 3வது டோஸ் வழங்கப்படும். இறுதியாக மீண்டும் அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.



Tags : Kovacsin ,Corona Vaccine Testing ,Corona , covaxin, Corona
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...