நடிகர், நடிகையின் சம்பளத்தை 50% குறைக்க முடிவு: கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய நடவடிக்கை!!!

சென்னை: கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்யும் வகையில், நடிகர், நடிகையின் சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைக்க பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையர்கள் ஆகியோர் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை எப்படி சரி செய்யலாம் என்று விவாதிக்கப்பட்டது. அப்போது நடிகர்கள்,  நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50 சதவீதம் வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதர சங்கங்களுடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலால் 100 நாட்களை கடந்து, சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முடங்கியுள்ளன.

 பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் 6வது லாக்டவுனுக்கு முன்பாக கிடைத்த 10 நாட்கள் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. படப்பிடிப்புகள் மெல்ல தொடங்கப்பட்டிருந்த வேளையில் தான் மீண்டும் ஜூலை 6ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தற்போது ஜூலை 7ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு விளக்கிக்கொள்ளப்பட்டு சில தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மீண்டும் அனுமதி கிடைத்திருக்கிறது.

Related Stories: