×

கொரோனா பாதிப்பால் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் மரணம்: நிர்வாகிகள் மலர் அஞ்சலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் ஜி.சுகுமார் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் ஜி.சுகுமார், கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவா், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதை தொடர்ந்து உத்திரமேரூர் அருகே சாலவாக்கத்தில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில், ஜி.சுகுமார் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

திமுக ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார், ஊராட்சி திமுக செயலாளர் வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரத்தில் எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், காஞ்சி வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் க.குமணன், வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர், நிர்வாகிகள் சந்துரு, கருணாநிதி, ஜெகனாதன், வெங்கடேசன், பாலன், மலர் மன்னன், சுகுமாரன் யுவராஜ், கமலக்கண்ணன், சங்கர், சீனுவாசன், கார்த்தி,  ராமு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த அவைத்தலைவர் ஜி.சுகுமாருக்கு தேன்மொழி என்ற மனைவியும், அண்ணாதுரை, அன்புதுரை ஆகிய மகன்கள், கொடிமலர் என்ற மகள் உள்ளனர்.

Tags : Coroner ,death ,Kanchipuram district ,Kanchipuram South , Corona, Kanchipuram, Southern District DMK, Head, Death, Administrators, Floral Tribute
× RELATED பட்டுக்கோட்டையில் கொரோனாவால்...