×

புழல் சிறைச்சாலையில் மேலும் 3 பேருக்கு தொற்று

சென்னை: புழல் மத்திய சிறை தண்டனை பிரிவில் பணியாற்றும் 26 வயது காவலர், விசாரணை பிரிவில் பணியாற்றும் 24 வயது காவலர் மற்றும் சிறையில் பணியாற்றும் 30 வயது தூய்மை பணியாளர் என 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இவர்களில் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் புழல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியிலும், தூய்மை பணியாளர் அவரது வீட்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புழல் சிறையில் நேற்று வரை 12 சிறை காவலர்கள், 3 தூய்மை பணியாளர்கள் என 15 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் ஒத்தவாடை தெரு மற்றும் நீதிதாசன் தெரு சேர்ந்த 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

Tags : prison ,Pulis , Pulp Prison, 3 persons, contagious
× RELATED சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல்