×

கனரா வங்கி அதிகாரி பொறுப்பேற்பு

சென்னை: கனரா வங்கி சென்னை வட்டத்தின் தலைமை பொது மேலாளராக பி.பழனிசாமி பொறுப்பேற்றார். சென்னை வட்டத்திற்கு உட்பட்டு 742  வங்கி கிளைகள் அமைந்துள்ளன. தற்போது, கொரோனா தொற்றால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எம்எஸ்எம்இ துறை, வணிக நிறுவனங்கள், விவசாயிகள், கார்ப்பரேட் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா கால அவசர கடன், கடன்களை நீட்டிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை கனரா வங்கி செயல்படுத்துகிறது. மேலும், குறைந்த வட்டி விகிதத்தில் தங்க கடன் அளிக்கப்படுகிறது.


Tags : Officer ,Canara Bank , Canara Bank, Officer, Responsible
× RELATED சந்தை குழுக்களை நிர்வகிக்கும் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு