×

கீழடி அகழாய்வில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி உள்ளிட்ட 4 இடங்களில் நடந்து வருகிறது. கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் 4 குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. கடந்த மாதம் 19ம் தேதி ஒரு குழந்தையின் முழு அளவிலான எலும்புக்கூடு கண்டறியப்பட்ட நிலையில், நேற்று நடந்த அகழாய்வில், மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் கிடைத்துள்ளது. இந்த எலும்புக்கூட்டினை மரபணு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்காக மதுரை காமராஜர் பல்கலைக்  கழகத்துக்கு அனுப்ப உள்ளனர்.

Tags : Underneath the trench, a child, a skeleton, a discovery
× RELATED சென்னிமலை அருகே கொடுமணல் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு