×

தொடர் போராட்டங்களால் ஏமனில் பஞ்சம்: பச்சிளம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு

சனா: ஏமன் நாட்டில் பஞ்சம் அதிகரித்து வருகிறது. பச்சிளம் குழந்தைகள் பலர் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏமன் நாட்டு அரசும் தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிறுவர்கள் உடல் முழு வளர்ச்சி அடையாமல் அவர்களுக்கு உணவு ஊசி மூலம் வழங்கப்படுகிறது. கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளபோதும் ஏமனில் உள்நாட்டு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

ஏமன் குறித்து கூறுகையில் உலகின் மோசமான சுகாதார சீர்கேடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட நாடு என வர்ணிக்கிறது ஐநா. பல ஆண்டுகளாக அரசியல் மோதல்கள் போராட்டங்கள் ஆகியவற்றால் ஏமன் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமனில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு புரட்சிப் படைகள் முயன்று வருகின்றன. இவற்றில் ஹுத்தி புரட்சிப்படையும் ஒன்று. இது தனது ராணுவப் படைகளை ஏவி ஏமனில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. இந்தப் புரட்சிப் படைகளுக்கு ஏமன் நாட்டுக்கு எதிரான சில நாடுகள் நிதி அளிப்பதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் தொடர்ந்து இதுபோல மத்திய ஆசிய நாடுகளில் புரட்சிகரப் படைகளுக்கு ஆயுதம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அந்நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் அதிகரித்து மக்கள் வேதனையில் வாழ்கின்றனர்.Tags : Famine ,Yemen ,protests ,Bachchalam , Yemen, famine, children
× RELATED வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை...