×

சதுப்பேரி கிடங்கில் குப்பை அகற்ற பின்லாந்து நாட்டில் இருந்து நவீன இயந்திரம் வேலூர் வருகை

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் இருந்து தினமும் 200 டன் குப்பைகள் வரையில் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் சதுப்பேரியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. அங்கு குப்பைகள் கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாகவும், நோய் பாதிப்பு அச்சம் உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தது. இதையடுத்து சதுப்பேரியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மாநகராட்சியில் உள்ள குப்பைகள் அகற்ற 48 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை கட்டிடங்கள் கட்டப்பட்டது.

ஆனால் சதுப்பேரியில் மலைபோல் தேங்கிக்கிடந்த குப்பைகள் அப்படியே இருந்தது. எனவே இதனை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ₹13 கோடியில் குப்பைகள் அகற்ற டெண்டர் விடப்பட்டது. அதன்படி பின்லாந்தில் இருந்து கப்பல் மூலம் நவீன இயந்திரம் சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே கொரோனா பாதிப்பால் நவீன இயந்திரம் வருவதற்கு தாமதமானது. 2 மாதங்கள் கழித்து நவீன இயந்திரம் இன்று அதிகாலை வேலூர் சதுப்பேரிக்கு வந்தடைந்தது.

மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில், மாநகராட்சி பொறியாளர் சீனிவாசன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா ஆகியோர் நவீன இயந்திரங்கள் பொருத்தி, குப்பைகள் அகற்றும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன்படி நவீன இயந்திரங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags : Finland ,Vellore ,Chaudhary Warehouse , Saddle Warehouse, Garbage, Finland, Modern Machine, Vellore
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...