ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!!

டெல்லி : ஓபிஎஸ் உள்ளிட்ட 11  எம்எல்ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. ஓபிஎஸ் உள்பட 11 பேரை தகுதிநீக்கம் செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், சபாநாயகர் முடிவெடுக்க கூறி, பிப்ரவரி 14ம் தேதி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.ஆனால்,  தீர்ப்பு வழங்கி பல மாதங்கள் ஆன நிலையில், சபாநாயகர் முடிவு  எடுக்கவில்லை என்று கூறி, திமுக தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது.இந் நிலையில்  ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்ய கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories:

More
>