×

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என ஒருவரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

அதிமுகவில் மட்டும் உயர்க்கல்வித்துறை அமைச்சரும் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.பி.அன்பழகன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி, உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன், ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்து நேற்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து  திமுகவில், கொரோனா தொற்றால் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்தார். மேலும் திமுகவில் செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் எம்.எல்.ஏ ஆர்.டி. அரசு ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று உயர்பதவியில் உள்ளவர்களை கூட கொரோனா விட்டுவைக்கவில்லை.

ஜூன் 12-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து எம்.எல்.ஏ. பழனி மற்றும் அவரது குடும்பத்தினர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது 26 நாட்கள் சிகிச்சைக்குப் பின் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த பழனி வீடு திரும்பினார்.கொரோனா தொற்றில் இருந்து மீண்ட எம்.எல்.ஏ. பழனி மருத்துவர் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : MLA ,constituency ,Palani ,AIADMK ,Sriperumbudur ,home , Sriperumbudur, constituency, AIADMK, MLA, Palani,returned, home
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா