×

இதுவரை வெளிநாடுகளில் இருந்த 43% தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் : மத்திய அரசு விளக்கம்

டெல்லி : தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூலை 11ம் தேதி வரை இயக்கப்படும் 495 சர்வதேச விமானங்களில் 44 விமானங்கள் தமிழகத்தில் தரையிறங்கும் என்றும் இதுவரை வெளிநாடுகளில் இருந்த 43% தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதையடுத்து வெளிநாடுகளில் சிக்கி உள்ள 25,939 தமிழர்களை அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் இந்திய சமூக நல நிதியம் மூலம் பாதித்தவர்களுக்கு உதவுவது குறித்தும் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Government ,Tamils ,home ,43% ,Central , Foreigners, 43% Tamils, Homeland, Central Government, Explanation
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்