தேவகோட்டையில் பேவர் பிளாக் சாலைகள் சேதம்: உடனே சீரமைக்கப்படுமா?

தேவகோட்டை: தேவகோட்டையில் சாலைகள் சேதமடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தேவகோட்டை மைனர் வீதியில் சில வருடங்களுக்கு முன் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. அப்போது சாக்கடை கால்வாயும் அமைக்கப்பட்டது. தற்போது மைனர் வீதியிலும் அதனைச் சார்ந்த சந்துகளிலும் சாலைகளில் உள்ள கற்கள் பெயர்ந்து பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் குப்பைகள் சாக்கடை கால்வாயில் விழுந்து அடைபட்டு கிடக்கிறது.

நகராட்சியின் சார்பில் இப்பகுதியில் கொரோனா காலத்தில் கூட துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை. எங்கு பார்த்தாலும் கொரோனா தொற்று பயம் இருக்கும் வேளையில் நகராட்சி நிர்வாகம் அறவே கண்டுகொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இனி வரும் நாட்களிலாவது துப்புரவுப்பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Related Stories:

>