×

மகாராஷ்டிராவில் இருந்து சேலத்திற்கு கொரோனாவை கொண்டு வந்தவர் மீது வழக்குப்பதிவு: ஒரே தெருவில் 21 பேருக்கு தொற்று உறுதியானதால் மக்கள் பீதி

* சேலத்தில் விஸ்பரூபம் எடுக்கும் கொரோனா
* கொரேனாவால் மக்கள் வேதனை

சேலம்: சேலம் சீரங்கன் தெருவில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வார காலமாகவே சேலத்தில் ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில்தான், விஸ்பரூபம் எடுத்து வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த சேலம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1288ஆக உள்ளது. இதில், பூரண குணமடைந்து வீடு திரும்பியர்களின் எண்ணிக்கை 413ஆக உள்ளது. தற்போது, கொரோனா தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 870ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக உள்ளது. தற்போது, சேலத்தில் கொரோனாவின் தாக்கம் வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.

இதுவரை சேலத்தில் 32 இடங்கள் தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்ட அதிகாரிகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வார காலமாகவே மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று உடனிலை குறித்து கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாகசேலம் மாவட்டம்  54வது கோட்டத்தில் உள்ள சீரங்கன் தெருவில் கணக்கெடுக்கும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மகாராஷ்டிராவை சேர்ந்த வெள்ளி வியாபாரி சச்சின் என்பவர், கடந்த வாரம் மகாராஷ்டிரா சென்று விட்டு யாருக்கும் தெரியாமல் சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சச்சிக்கும் அவரது குடுப்பத்தில் உள்ள மனைவி, 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவர்கள் பழகிய அனைத்து இடங்களையும் பரிசோதனைகள் செய்த போது இவர்கள் மூலம் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா நோயை பரப்பியதற்காக சச்சின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில்தான், சேலத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : Prosecutor ,Salem ,coroner ,Maharashtra ,street , Case , Maharashtra , Salem, panic ,21 people,get infected ,street
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...