×

வட மாநிலங்களில் நீடிக்கும் வெட்டுக்கிளிகள் தொல்லை: ஹெலிகாப்டர் மூலம் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்!!!

ஜெய்ப்பூர்:  வட மாநிலங்களில் விலை நிலங்களில் தொல்லை கொடுத்து வரும் பாலைவன வெட்டுக்கிளி கூட்டத்தை ஒழிக்க ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இதனால், வட மாநில மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, விமான படையின் எம்ஐ17ன் ரக ஹெலிகாப்டர்களில் புதிய தொழில்நுட்பத்தில் மாலத்தியான் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

அதாவது, வெட்டுக்கிளிகள் அட்டகாசம் அதிகம் உள்ள இடங்களில், இரவு நேரத்தில் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. வெட்டுக்கிளிகளை முற்றிலுமாக அழித்தொழிக்கும் வகையில், மாலத்தியான் மருந்தை தனித்துவத்துடன் தயார் செய்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ராஜஸ்தானில் கடந்த 3ம் தேதி தொடங்கி ஜெய்சல்மர், பார்மர், ஜோத்பூர், தௌசா மற்றும் நாகவூர் உள்ளிட்ட 25 இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது. இதன் மூலம் வெட்டுக்கிளிகளின் தாக்கம் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேலும், வெட்டுக்கிளிகளை அடியோடு ஒழிக்க இங்கிலாந்தை சேர்ந்த மைக்ரான் குழுமம் என்ற நிறுவனத்துடன் ராஜஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags : Northern ,states ,helicopter drug spraying , Locusts plague , northern states, helicopter, drug spraying
× RELATED சோமாலியாவில் இருந்து...