×

தமிழகத்தில் 50வது மருத்துவ கல்லூரி : அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!!

சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்கு காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அரியலூரில் 10.83 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 347 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிக்கு, 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் வழங்குகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 49 மருத்துவக் கல்லூரிகளில் 7 ஆயிரத்து 150 இடங்கள் உள்ள நிலையில், புதிதாக அமைக்கப்படும் அரியலூர் மருத்துவக் கல்லூரி மூலம் கூடுதலாக 150 இடங்கள் கிடைக்கும்.

Tags : 50th Medical College ,Tamilnadu ,Ariyalur District ,Ariyalur Medical College ,Government Medical College Video 50th Medical College , 50th Medical College in Tamilnadu: Ariyalur Medical College Video...
× RELATED அரியலூர் மாவட்டத்தில் ஒய்வு பெற்ற...