×

தூத்துக்குடி விளாத்திகுளம் காய்கறி சந்தையில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இதுவரை 5 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி:  தூத்துக்குடி விளாத்திகுளம் காய்கறி சந்தையில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காய்கறி சந்தையில் முதலில் 20 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அந்த சந்தையில் பணிபுரியும் 104 வியாபாரிகளுக்கும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அப்போது புதிதாக மேலும், 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக விளாத்திகுளம் சந்தையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,271ஆக உள்ளது. இவற்றில் 865 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடியில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 401ஆக உள்ளது. தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா தொற்றின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும் திணறி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள விளாத்திகுளம் காய்கறி சந்தையில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இதனைத்தொடர்ந்து, காய்கறி சந்தையில் வியாபாரம் செய்த அனைத்து வியாபாரிகளின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், காய்கறி சந்தை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : deaths ,Thoothukudi Valathikulam , 44 deaths , Thoothukudi , vegetable market,5 deaths , far
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...