×

கொரோனாவால் பலியானவர் உடல் ஜே.சி.பி மூலம் குழியில் தள்ளி அடக்கம்: கண்ணியமற்ற முறையில் உடல் அடக்கத்திற்கு கடும் கண்டனம்

திருப்பதி: திருப்பதியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஜே.சி.பி மூலம் குழியில் தள்ளி அடக்கம் செய்ததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. காய்கறி சந்தையில் பணியாற்றி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம்  ஹரிச்சந்திரா மயானத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் உடலை எடுத்து சென்று ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் தூக்கி போட்டு அடக்கம் செய்துள்ளனர்.

இதற்கு கண்டனம் எழுந்த நிலையில் அவர் உடல் எடை 150 கிலோ இருந்தால்  தூக்க முடியாமல் ஜே.சி.பி.யை பயன்படுத்தியதாக திருப்பதி மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். இதுபோன்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெறாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அண்மையில் கர்நாடகாவில் இதேபோன்று கண்ணியமற்ற முறையில் உடலை செய்தது  சர்ச்சையானது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கை ஆகும்.


Tags : victim ,JCP ,JCB ,Andhra ,Covid Patient , Corona, Patient body, JCB , Tirupati
× RELATED நெல்லையில் ரூ.2 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு..!!