×

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 முதியவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 38 வயது ஆண் உட்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர். சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.


Tags : Chennai ,deaths ,Madras Corona , 29 killed , Chennai, Corona
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...