×

திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி உத்தரவு: 10 பேரிடம் போலீசார் விசாணை

திருச்சி: திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி ஜியா உல்ஹக் தலைமையில் உத்தரவிட்டுள்ளார். திருச்சியில் 9 வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் சோமரசன்பேட்டை, அதவத்தூர்பாளையம் பகுதியில் காணாமல்போன மாணவியின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணிவரை வீட்டில் இருந்த மாணவி கழிப்பிடம் செல்வதற்காக முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதிக்கு மாணவி சென்றதாக கூறப்பட்ட நிலையில், மாணவியின் தந்தை பெரியசாமியும் மற்றும் மாணவியின் தாயாரும், உறவினர்களும் தேடிவந்தனர். இந்நிலையில் மாணவியின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதியில் கிடந்ததாக கூறப்பட்ட நிலையில், மாணவியின் ஆடையை வைத்து அடையாளம் கண்டு கொண்ட பெற்றோர் இது குறித்து தகவல் கொடுக்க, சோமரசன்பேட்டை காவல் ஆய்வாளர் சிபி சக்கரவர்த்தி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி கோகிலா தலைமையில் நேற்று 3 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி உத்தரவிட்டார். ஏற்கனவே அண்மையில் புதுக்கோட்டை, ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : policemen ,student ,Trichy Trichy , 11 policemen , murder , Adivathur, Trichy
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...