×

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தூப்பாக்கிச்சுட்டில் தீவரவாதி ஒருவர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் கூசு என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு படையினர் , ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபில்ஸ் பிரிவு மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஆகியோர் அடங்கிய கூட்டு பாதுகாப்பு படை குறிப்பிட்ட  இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியது. மேலும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் குறிப்பிட்ட இடத்தை தன் வலையத்திற்குள் கொண்டு வந்தது.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். எனவே இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதலில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். மேலும் பயங்கரவாதி ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைதொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியில் பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : Security forces ,Pulwama ,district ,security personnel ,Jammu and Kashmir Security ,Kashmir ,Jammu , Security personnel,killed , security checks , Jammu and Kashmir's ,Pulwama
× RELATED ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை