×

மீஞ்சூர் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் கைது: பணம் தராததால் கொன்றதாக வாக்குமூலம்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே அதிமுக பிரமுகர் கொலையில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (35). இவர், வாயலூர் பகுதி அதிமுக கிளைச் செயலாளராகவும் இருந்துள்ளார். அங்குள்ள அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள் செய்து வந்தார். கடந்த 3ம் தேதி, ஊரணம்பேடு கம்பெனி வளாகத்தில் நின்றிருந்த சிலம்பரசனை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் உத்தரவின்படி, காட்டூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கில் அத்திப்பட்டு புதுநகர் சுடுகாட்டு பகுதியில் மறைந்திருந்த எண்ணூரை சேர்ந்த மணவாளன் (27), மதன்குமார் (30), சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஜெயபால் (33), மீஞ்சூரை சேர்ந்த தீபன் (28), அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த மோகன்ராஜ் (27), வாயலூரை சேர்ந்த மூர்த்தி (48) மற்றும் மோகன் (21) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இதுபற்றி அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், காண்டிராக்ட் விஷயத்தில் சிலம்பரசனிடம் பணம் கேட்டு அவர்கள் மிரட்டினர். ஆனால் பணம் தர சிலம்பரசன் மறுத்ததுடன் அவர்களை எச்சரித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்தவர்கள் சிலம்பரசனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் கைது செய்த 7 பேரையும் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள எண்ணூரை சேர்ந்த இளங்கோவனை தேடி வருகின்றனர்.


Tags : persons ,murder ,AIADMK ,Minjur Minajur , Minjur, prime minister, murder case, 7 arrested
× RELATED அம்பாசமுத்திரம் அருகே விவசாயி...