×

ஆன்லைனில் மாஞ்சா நூல் வாங்கி விற்றவர் சிக்கினார்

ஆவடி: ஆவடி பகுதியில் ஆன்லைனில் மாஞ்சா நூல் வாங்கி விற்றவர் சிக்கினார் மாஞ்சா நூல் காற்றாடிகள் விற்பதாக ஆவடி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல்  கிடைத்தது. இதையடுத்து ஆவடி புதுநகர் 3வது தெருவைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் அன்பரசு  (42) மாஞ்சா நூல், காற்றாடிகளை வாலிபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை போலீசார், அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த 103 காற்றாடிகள், 7 பண்டல்கள் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அன்பரசு ஆன்லைன் மூலம் காற்றாடி, மாஞ்சா நூல் ஆகியவற்றை ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆர்டர் செய்துள்ளார். பின்னர், அவர் அந்த நிறுவனத்திற்கு கூகுள் பே மூலமாக பணம் செலுத்தி ஸ்பீடு போஸ்ட் மூலம் காற்றாடிகள், மாஞ்சா நூல் ஆகியவற்றை பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று மாலை அவரை கைது செய்தனர்.


Tags : Online, manga thread, seller, trapped
× RELATED நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி...