×

சிறை தலைமை வார்டன் சாவு

பூந்தமல்லி: புழல் சிறை காவலர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (56). இவர், வேலூர் சிறையில் தலைமை வார்டனாக பணிபுரிந்து வந்தார். கடந்த 3ம் தேதி பணி முடிந்து, பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே சென்றபோது, சாலையை கடந்த மாட்டின் மீது எதிர்பாரதவிதமாக பைக் மோதியதில் சுப்ரமணியன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Prison Chief Warden Saw , Prison, Chief Warden, Saw
× RELATED மதுரையில் சொகுசு கார்களில் பயங்கர...